விவாகரத்து வழக்கில் ஆத்திரம்.. போலீஸ் மனைவியை வீடு புகுந்து வெட்டிக்கொன்ற கணவர் கைது!
கேரள மாநிலம் கண்ணூர் அருகே குடும்பத் தகராறில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை காவலரை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடிய நபரை போலீஸார் கைது செய்தனர். கேரள மாநிலம் கண்ணூர் கொழும்மல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (40). இவரது மனைவி திவ்யா (35), காசர்கோடு மாவட்டம் சந்தேரா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். தம்பதிக்கு 7ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார்.இந்நிலையில் கணவன், மனைவி இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து திவ்யா கண்ணூர் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.
இதனால் கடந்த சில மாதங்களாக திவ்யா தனது மகனுடன் அருகில் உள்ள கரிவெள்ளூர் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதையடுத்து நேற்று விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை முடிந்து திவ்யா வீடு திரும்பினார். இந்நிலையில் மாலை 6 மணியளவில் ராஜேஷ் தனது மனைவி வீட்டிற்கு பைக்கில் சென்றார். பின்னர், வீட்டுக்குள் புகுந்த அவர், திவ்யாவை அரிவாளால் பலமுறை வெட்டினர். இதை தடுக்க வந்த திவ்யாவின் தந்தை, வாசுவையும் வெட்டினார். அதன்பின், ராஜேஷ் அங்கிருந்து தப்பியோடினார். அரிவாளால் வெட்டியதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டனர்.
உடனடியாக 2 பேரும் பையனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து வளப்பட்டணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தப்பி ஓடிய ராஜேஷ் அங்குள்ள பாரில் இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர், அங்கிருந்த ராஜேஷை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!