undefined

தொடர்ந்து சத்தம் போட்டதால் ஆத்திரம்.. 5 நாய்க்குட்டிகளை எரித்து கொன்ற இரு பெண்கள் கைது!

 

இந்தியாவில் விலங்குகளை கொன்றால் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தெருநாய்களை கொலை செய்வது அதிகமாகி வருகிறது. அந்த வகையில் நாய் குட்டிகளை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் சந்த் நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 2 பெண்கள் கடந்த 5ம் தேதி ரோதா சாலையில் 5 நாய்க்குட்டிகளை உயிருடன் எரித்து கொன்றதாக கூறப்படுகிறது. விலங்குகள் நல அமைப்பின் பொதுச்செயலாளர் அன்சுமாலி வசிஷ்ட் போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், சில நாட்களுக்கு முன், சாலையில் சுற்றித் திரிந்த தெருநாய் ஒன்று 5 குட்டிகளை ஈன்றது.

நாய்க்குட்டிகளின் சத்தத்தால் ஆத்திரமடைந்த இரண்டு பெண்கள், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொன்றனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அதே பகுதியை சேர்ந்த சோபா, ஆர்த்தி ஆகிய இரு பெண்களை கைது செய்தனர். அவர்கள் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 325-ன் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!