undefined

 குளிர்பானத்தில் மயக்க மருந்து... இளம்பெண் ஆசிரியை உடம்பு முழுக்க காயம்... அதிர வைத்த தலைமை ஆசிரியை சங்கீதா!

 
 

சென்னை நீலாங்கரையை அடுத்துள்ள ஈசிஆர் பகுதி ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கீதா (40). இவர் தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியையாக பனிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் சங்கீதா தலைமையாசிரியையாக பணிபுரியும் அதே பள்ளியில், 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடர்பாக திட்டமிட்டு விவாதிப்பதற்காக நேற்று முன்தினம் பணியில் புதிதாக சேர்ந்த ஆசிரியையை தனது வீட்டிற்கு வரும்படி சங்கீதா அழைத்துள்ளார். 

பள்ளி தலைமையாசிரியை சங்கீதாவின் வீட்டிற்குச் சென்ற பெண் ஆசிரியையை படுக்கை அறையில் உட்கார வைத்து குடிக்க குளிர்பானம் கொடுத்து உபசரித்துள்ளார் சங்கீதா. குளிர்பானம் குடித்த அடுத்த சில நிமிடங்களில் இளம்பெண் ஆசிரியை மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் பெண் ஆசிரியையிடம் தலைமையாசிரியர் சங்கீதா பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார். 

இளம் ஆசிரியை மயக்கம் தெளிந்து விழித்து எழுந்த போது அவரது உடலில் ஆங்காங்கே காயத்துடன் பாலியல் ரீதியாக துன்பப்படுத்தப் பட்டு இருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அங்கிருந்து தப்பித்துச் சென்ற இளம்பெண் ஆசிரியை தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து திருவான்மியூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், தலைமை ஆசிரியை சங்கீதாவை நேற்று கைது செய்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!