undefined

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கவுண்டர்கள்... இதுதான் திராவிட மாடலா? அன்புமணி ஆவேசம்!

 
 

தமிழகம் முழுவதும் 3500 அரசு மதுக்கடைகளில்  கூடுதல் விற்பனைக் கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளது. இது குறித்து பாமக தலைவர் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில்  தினமும் ரூ.2 லட்சத்திற்கும் கூடுதலாக மது வணிகம் நடைபெறும் 3500-க்கும் கூடுதலான டாஸ்மாக் மதுக்கடைகளில் 2 வது விற்பனைக் கவுண்டரை  திறக்க டாஸ்மாக் நிர்வாகம்  முடிவு செய்திருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள்  வெளியாகியுள்ளன.   மது விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன்  டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக் கண்டிக்கத்தக்கது.  


தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 4775 மதுக்கடைகள்  செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 3500க்கும்  கூடுதலான கடைகளில், அதாவது  கிட்டத்தட்ட 75% கடைகளில் தினமும் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக மது விற்பனையாகிறது. இதில் பல கடைகளில் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று விற்பனைக் கவுண்டர்கள் உள்ளன. இருந்தாலும் கூட மாலை நேரங்களிலும் தீபாவளி  மற்றும் விழாக்காலங்களிலும்  வாடிக்கையாளர் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை. இதனையடுத்து  கூடுதலாக  இன்னுமொரு கவுண்டரை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

மாநிலம் முழுவதும் 35000க்கும்   கூடுதலான ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.  வெளிச்சந்தையில்  உணவுப் பொருட்களை வாங்க ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.  அவர்களின் நிலைமை குறித்து அரசுக்கு எந்த கவலையும் இல்லை.  மதுக்கடைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் ஒரு சில நிமிடங்கள் கூட  காத்திருக்கக் கூடாது என்று நினைத்து  கூடுதல் கவுண்டர்களை திறக்கிறது. எனில்  அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது. வருவாய் கொடுத்து வாழ வைக்கும் மது வாடிக்கையாளர்கள் நலனை அரசு எந்த அளவுக்கு பாதுகாக்கிறது என்பதற்கு இதுவே சான்று. 
மதுவை மட்டுப்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். மது வணிகத்தை ஊக்குவிக்கும் செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது. ஏற்கனவே அதிக அளவில் மது வணிகம் நடைபெறும் கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்களை திறப்பதென்பது மது வணிகம் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். எனவே, மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, படிப்படியாக மதுக்கடைகளை மூடி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என  குறிப்பிட்டுள்ளார். 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!