undefined

செம வைரல் வீடியோ... ரூ.1000 கோடி செலவில் நடந்த அம்பானி மகன் திருமணம்... அசால்டாக ரீமேக் செய்த மாணவர்கள்!

 

சுமார் ரூ.1000 கோடி செலவழித்து மொத்த நாடும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு தடபுடலாக முகேஷ் அம்பானி, தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களைச் செய்து முடித்தார். ஆனந்த் அம்பானி -  ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் வரும் ஜூலை மாதம் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தின் முந்தைய கொண்டாட்ட விழா, மூன்று நாட்கள் குஜராத்தின் ஜாம்நகரில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், இவர்களது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களை பாகிஸ்தான் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அசத்தலாக ரீமேக் செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்திய நட்சத்திரங்கள் சச்சின், டோனி, ரோகித் சர்மா, ரஜினி, நயன்தாரா,  அமிதாப், ஷாருக்கான் என்று பல மாநிலங்களின் ஜாம்பவான்களும் அம்பானி வீட்டு விருந்தில் பங்கேற்றனர். டான்ஸ், பாட்டு, ட்ரீட் என்று மூன்று நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மட்டுமே முகேஷ் அம்பானி ரூ. 1,250 கோடி செலவழித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இந்த 3 நாட்களின் மொத்த விழாவையும் பாகிஸ்தான் மருத்துவ கல்லூரி மாணவர்கள் ரீமேக் செய்துள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. இது வரை 10 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!