பெரும் சோகம்...  சைக்கிளில் வீடு திரும்பிய இந்திய மாணவி பலி!

 

 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று தங்கி படிக்கும் மாணவர்களிடையே பெரும் அச்சம் உருவாகி வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள லண்டன் பொருளாதார கல்வி மையத்தில் பிஎச்.டி.  படித்து வந்தவர் 33 வயது சேஸ்த கோச்சார் . இவர் அரியானாவின் குருகிராம் நகரில் வசித்து வருகிறார். இவர்  கோச்சார், டெல்லி பல்கலைக்கழகம், அசோகா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்து விட்டு, அமெரிக்காவின் பென்சில்வேனியா மற்றும் சிகாகோ பல்கலைக்ககளிலும் படித்து வந்தார்.  

தொடர்ந்து, லண்டனில் படித்து வந்த அவர், சைக்கிளில் கடந்த வாரம் தன்னுடைய வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது, அவர் மீது லாரி ஒன்று  மோதியதில்  படுகாயம் அடைந்தார்.  அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கணவர் பிரசாந்த் உடனடியாக அவரை மீட்க சென்றார். ஆனால், அதில் பலனில்லை. கோச்சார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிகிறது. நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான அமிதாப் காந்த் இந்த தகவலை ஆன்லைனில் பதிவிட்டுள்ளார்.  அதில், தைரியம் மற்றும் திறமை வாய்ந்த கோச்சார் மிக மிக இளம் வயதில் உலகை விட்டு சென்று விட்டார்.

அவருக்கு இரங்கல்கள் எனத் தெரிவித்து உள்ளார். கோச்சார், 2021-23 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில், நிதி ஆயோக்கில் மூத்த ஆலோசகர் பணிசெய்து வந்தார்.   கோச்சாரின் தந்தை ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.பி. கோச்சார், இறுதி சடங்கு செய்வதற்காக லண்டனுக்கு சென்று அவருடைய மகளின் உடலை பெற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்