undefined

தனியாக வசித்த மூதாட்டியிடம் கைவரிசை.. 15 சவரன் தங்க நகைகளை ஆட்டைய போட்ட 4பேர் கைது!

 

சென்னை அடையாறு இந்திரா நகரை சேர்ந்தவர் சரோஜா என்ற 88 வயது மூதாட்டி. இவர் தனியாக வசித்து வரும் நிலையில், இவருக்கு துணையாக கடலூரைச் சேர்ந்த ராஜாமணி என்ற 49 வயது பெண் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ராஜாமணி வேலைக்கு செல்வதை நிறுத்தியுள்ளார். இதையடுத்து, தனியாக வசிக்கும் மூதாட்டி சரோஜா வீட்டில் நகைகள் இருப்பதை அறிந்த ராஜாமணி, அவரது நண்பர்களுடன் சேர்ந்து நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டார்.

இதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 20ம் தேதி ராஜாமணி மற்றும் அவரது நண்பர்கள் சரோஜா வீட்டிற்கு சென்றனர். பின்னர், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சரோஜாவின் முகத்தில் மயக்க மருந்தை தெளித்து, வீட்டில் இருந்த சவரன் தங்க நகைகள், அணிந்திருந்த நகைகள் உள்பட 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்நிலையில் சரோஜா வீட்டில் இருந்த 15 சவரன் நகைகள், அணிந்திருந்த நகைகள் உள்ளிட்டவை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வீடு புகுந்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், மூதாட்டி சரோஜா வீட்டில் நகைகளை கொள்ளையடித்த கும்பல் கடலூரில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.

இதையடுத்து, ராஜாமணி, அவரது நண்பர்கள் மனோகரன் (50), ராஜேஷ்குமார் (40), ராஜேஷ்குமார் மனைவி புவனேஸ்வரி ஆகிய 4 பேரையும் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து, கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்து, வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!