பல வருடங்களாக சுத்தம் செய்யாத கால்வாய்.. வினோத முறையில் கண்டனம் தெரிவித்த தம்பதி.. போட்டோஸ் வைரல்..!

 

ஆக்ராவின் நாகலகாலியை சேர்ந்தவர் பகவான் சர்மா, அவருடைய மனைவி உமா தேவி. 17வது திருமண நாளை முன்னிட்டு வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் பகுதியில் நின்று மாலைகளை பரிமாறி கொண்டாடினர். இவர்களுடன் அப்பகுதி மக்களும் பேண்ட் வாத்தியங்கள் வாசித்து திருமண நாளை கொண்டாடினர்.

ஆக்ராவில் உள்ள நாகல காளி செம்ரி மற்றும் ராஜாராய் பகுதியைச் சுற்றி சுமார் பத்தாயிரம் முதல் பன்னிரண்டாயிரம் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக இந்த பகுதியில் போதிய சாலை வசதி, சாக்கடை கால்வாய், வடிகால் வசதி இல்லை என்று கூறப்படுகிறது. துர்நாற்றம் வீசும் கழிவுநீர் வாய்க்கால் அருகே வசிக்கின்றனர். இதனால், சாலைகளில் கழிவு நீர் நிரம்பி, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் பள்ளி குழந்தைகள் அசுத்தமான தண்ணீரில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடமும், அரசிடமும் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் பலனில்லை.

இந்நிலையில் பகவான் சர்மாவும், அவரது மனைவி உமாதேவியும் தங்களது 17வது திருமண நாளை லட்சத்தீவு அல்லது மாலத்தீவில் கொண்டாட திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதிகாரிகளும், மக்களும் தங்கள் பகுதியின் நிலையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், தங்கள் பகுதியில் உள்ள துர்நாற்றம் வீசும் கழிவுநீர் வாய்க்காலில் நின்று திருமண நாளை கொண்டாடினர். அவர்கள் மாலைகளை பரிமாறிக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க