undefined

அட ... 80 வயது தாத்தாவை  26 வயது இளைஞராக்கலாம்...!! விஞ்ஞானிகள் அசத்தல் சாதனை...!!

 

விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ச்சி அடைந்து வருகின்றன. மனிதனுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பவை பல . அதில் குறிப்பாக வயதாக ஆக முதுமை அடைதல். இதனை மனிதனால் ஒத்துக் கொள்ள முடியாமல் பல ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது விஞ்ஞான உலகம்.  இதற்கு மிகப்பெரிய காரணமாக கூறப்படுவது இளமையை இழக்க விரும்பாதது ஒரு காரணம் எனில் முதுமையினால் உடலில் ஏற்படும் பாதிப்புகளும்  மனிதனை அச்சுறுத்துவது தான்.   இந்நிலையில், மனிதர்களுக்கு வயதாவதை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஆய்வில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள்   தெரிவித்துள்ளனர்.


அதன்படி  எலிகளின் வயதைக் குறைக்கும் சோதனை 70% வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக  இந்த சோதனையை  மனிதர்கள் மீது நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை முற்றிலும் வெற்றி அடைந்து விட்டால்  முதியவரை இளைஞராக மாற்றலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள்.  மனிதனின் மரபணுவில் மாற்றம் கொண்டு வந்து உயிரியல் ரீதியாக நமது உடல் உறுப்புகளின் வயதை குறைக்கலாம் என்கின்றனர்   கலிபோர்னியா பல்கலைக்கழக   விஞ்ஞானிகள் .  

இது குறித்து  நேச்சுர் இதழில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்  "பன்றிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மற்றும் நானோ துகள்கள்  வயதான எலிக்கு செலுத்தப்பட்டன.  அதில் அந்த எலியின் மரபணுவில் பெரிய மாற்றம் நிகழ்ந்து   இதயம் மற்றும் கல்லீரலின் வயது பாதியாக குறைந்துள்ளது. இந்த சோதனையை மனிதர்கள் மீது நடத்தினால் 80 வயது முதியவரை 26 வயது இளைஞராக மாற்றலாம்" எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், மனிதர்கள் மீது இந்த சோதனையை நடத்தும் போது அதில் ஒரு வேளை வேறு சில மாற்றங்களும் ஏற்படலாம் என்கின்றனர்  விஞ்ஞானிகள் .  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!