சூப்பர்...  அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!

 

 சென்னையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை சென்னை மாநகராட்சி  வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வின் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ3.07 கோடி கூடுதல் செலவாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி நடந்த போதே அம்மா உணவக ஊழியர்கள்  ஊதிய உயர்வு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில்  8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலி உயர்த்தி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலால் அம்மா உணவக ஊழியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சமீபத்தில் அம்மா உணவக உட்கட்டமைப்பு மேம்படுத்த ரூ5 கோடி நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!