undefined

 ஒரே நாடு.. ஒரே தேர்வு.. ஒரே பாடதிட்டங்கள் கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிரானது... விஜய் ஆவேசம்!

 
 

 

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது, அந்த தேர்வு தேவையில்லை என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று இரண்டாம் கட்ட கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசியதாவது:


"நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவ, மாணவிகள்... குறிப்பாக கிராமப் புறத்தைச் சேர்ந்த ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே சத்தியமான உண்மை.நீட் தேர்வை 3 பிரச்சினைகளாக நான் பார்க்கிறேன். ஒன்று- இந்த நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது.

1975க்கு முன்பு கல்வி மாநிலப் பட்டியலில் தான் இருந்தது. அதன் பிறகு அதை பொதுப்பட்டியலில் சேர்த்தனர். அப்போது முதல் பிரச்சினை தொடங்கியது.
இரண்டாவது - ஒரே நாடு, ஒரே பாடத்திட்டங்கள், ஒரே தேர்வு... இது கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிரான விஷயம். பாடத்திட்டங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!