இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக அமர் பிரித் சிங் தேர்வு.. மத்திய அரசு உத்தரவு!
இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக அமர் பிரித் சிங் பதவியேற்க உள்ளார். இந்திய விமானப்படைத் தலைவர் வி.ஆர். சவுத்ரி வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதை கருத்தில் கொண்டு, சீனியாரிட்டி கொள்கையின்படி, ஏர் மார்ஷலாக பணியாற்றி வரும் சிங்கை, அப்பதவிக்கு, அரசு தேர்வு செய்துள்ளது. சிங் 1981 டிசம்பரில் போர் விமானியாக பணியில் சேர்ந்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய விமானப்படையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 4 தசாப்தங்களாக சேவையில் இருக்கும் அவர் தளபதி, பணியாளர்கள், அறிவுறுத்தல், வெளிநாட்டு நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டதாரியான சிங், பாதுகாப்பு சேவை பணியாளர் கல்லூரி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரியிலும் படித்துள்ளார்.
பல்வேறு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் 5000 மணிநேரத்திற்கு மேல் அனுபவம் பெற்றவர். அவர் ரஷ்யாவின் மாஸ்கோவில் MiG-29 போர் விமான மேம்பாட்டு திட்ட மேலாண்மை குழுவிற்கு தலைமை தாங்கினார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் இலகுரக விமானத்தின் திட்ட இயக்குனராகவும் இருந்தார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!