undefined

டபுள் தீபாவளி...  அமரன் முன்பதிவு தொடங்கியது!

 
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் தனிமுத்திரை பதித்த நடிகராக வலம் வருபவர்  சிவகார்த்திகேயன். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அமரன்  திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் ஒரு ராணுவ வீரரின் கதையை மையப்படுத்தி உருவாகும் படம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.  வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர்.


கடந்த 2014ம் ஆண்டு காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் பொதுமக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றும் ஆபரேஷனுக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் தலைமை தாங்கினார்.பொதுமக்களை பத்திரமாக மீட்கும் போராட்டத்தில் அவர் தனது உயிரினைத் தியாகம் செய்தார். தற்போது இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு அமரன் என்ற படம் தயாராகியுள்ளது.சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தனாக நடிக்க சாய் பல்லவி அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


அக்டோபர் 31ம் தேதி வெள்ளிக்கிழமை இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் ப்ரீ புக்கிங் மாஸாக நடந்து வருகிறது. இதுவரையலான ப்ரீ புக்கிங்கில் படம் ரூ. 4 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!