undefined

விஜய் கட்சியுடன் கூட்டணியா? செல்வப்பெருந்தகை பதில்!

 
 

 


விஜய் கட்சியுடன் கூட்டணியா? என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் தென்காசியில் பத்திரிக்கையாளர்கள் கேள்வியெழுப்பியதற்கு, இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. விஜய் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.

தென்காசியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசுகையில், “நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பீர்களா? என்று கேட்கிறீர்கள். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். தற்போது இந்தியா கூட்டணி ஒற்றுமையுடனும் வலிமையாகவும் உள்ளது.

இனிவரும் காலங்களிலும் காங்கிரஸ் கட்சி எங்கு உள்ளதோ, அந்த கூட்டணி வெற்றி பெறும். தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது. அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!