undefined

 பக்தர்களுக்கு 1 லட்சம் பிரசாத பைகள்... அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக தொடங்கியது!

 
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று காலை அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகல  தொடங்கியது. சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக  வாழ்த்துரை வழங்கினார். 

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இன்று நாளையும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பழனியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. இந்த  மாநாட்டை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி இன்று காலை 9 மணிக்கு தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் முருகனின் வழிபாட்டு சிறப்பு, இலக்கிய சிறப்பு குறித்து கருத்துரங்கங்கள் நடைபெறுவதுடன் முருகனின் புகழ் குறித்த 1,300 ஆய்வு  கட்டுரைகள் பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்படுகின்றன்.  மாநாட்டு மலர் வெளியிடுதல் நிகழ்ச்சியும்,  முருகனின் புகழ் தொண்டு ஆற்றிய 16 பேருக்கு ஒரு பவுன் தங்கக் காசு மற்றும் சான்றிதழும் வழங்கி  கௌரவிக்கப்படுகிறார்கள். 

மாநாட்டு நுழைவாயிலில் மழை வடிவிலான பிரம்மாண்டமான அமைப்பில் சிவன், பார்வதி, முருகர், விநாயகர், அருணகிரிநாதர், வீரபாகு போன்ற உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகப்பில் ஆறுபடை வீடு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மாநாட்டுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் முருகனின் ராஜ அலங்கார படம், திருநீறு, குங்குமம், 200 கிராம் பஞ்சாமிர்தம், கந்த சஷ்டி புத்தகம், லட்டு, முறுக்கு ஆகியவை அடங்கிய 1 லட்சம் பிரசாத பைகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை