undefined

அத்தனைக் கனவும் பாழாய் போச்சே... நாத்தனார் கொடுமை... இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்நாளின் முக்கிய தருணமாக திருமணம் இருக்கும். கல்யாண கனவுடன் எதிர்காலம் பற்றிய அத்தனைக் கனவும் இன்னொரு பெண்ணால் பாழாய் போனது. அத்தனை சாந்தமான பொண்ணு சார் அவ என்று கதறுகிறார்கள் உறவினர்கள். அதிர்ந்து கூட பேச மாட்டா என்று தோழிகளும் மருகுகிறார்கள். வரதட்சணைக் கேட்டு நாத்தனாருடன் சேர்ந்து கொண்டு கணவனும் கொடுமைப்படுத்த துவங்கியதும் தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறாள். கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வந்தவர் பூஜா (22). ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர் 2022 இல் சுனில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் பெங்களூரில் வாடகை வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். ​​திருமணத்தின் போது சுனிலுக்கு பெண்ணின் வீட்டில் இருந்து வரதட்சணை கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சுனில் அடிக்கடி வரதட்சணை கேட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். ஆனால் பூஜா வரதட்சணை கொடுக்க மறுத்துவிட்டார். இதனிடையே சுனிலின் சகோதரி உட்பட குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் பூஜா மிகவும் மனமுடைந்தார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறிய பூஜா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனில் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!