undefined

உஷார்... நடுரோட்டில் இப்படி கூட திருடுறாய்ங்க... அதிர செய்த இளைஞர்கள்!

 

உஷார் மக்களே... காலம் கெட்டு கிடக்குது. சொற்ப சம்பளத்தில் ஒரு சிலிண்டருக்கு இவ்வளவு காசு என்று பிழைப்பை நடத்துபவர்களிடம் நடுரோட்டில் துணிச்சலாக சிலிண்டரைத் திருடி அதிர செய்திருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். விளையாட்டுக்காகவோ, சாகசங்களைச் செய்கிற வயசு காரணமாகவோ செய்ய துணிந்த இந்த திருட்டு இன்னொருத்தரின் வாழ்க்கையை எந்தளவுக்கு பாதிக்க செய்யும் என்கிற நினைப்பு துளியும் இல்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டப்பகலில் ரோட்டில் நின்றுக் கொண்டிருந்த வாகனத்தில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டரை திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியில் நேற்று பகலில் தனியார் சமையல் எரிவாயு சிலிண்டர் நிறுவனம் சார்பில் அந்தப் பகுதியில் ஒரு வீட்டிற்கு சிலிண்டர் விநியோகம் செய்வதற்காக சிலிண்டர் கொண்டு வந்த சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு சிலிண்டர் டெலிவரி செய்ய உள்ளே சென்றனர். 

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சமையல் எரிவாயு இருந்த வாகனத்தில் ஊழியர் இல்லாததை தெரிந்து கொண்டு சரக்கு வாகனத்தில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வடபாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!