undefined

உஷார்... நாளை முதல் ரயில் டிக்கெட் துவங்கி வங்கி டெபாசிட், கிரெடிட் கார்டு சார்ஜ் வரை அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

 
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் மறந்துடாதீங்க. நாளை நவம்பர் 1ம் தேதி முதல் இந்த முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. 

நாளை நவம்பர் 1ம் தேதி முதல் ரிசர்வ் வங்கியின் புதிய உள்நாட்டு பணப்பரிமாற்றங்களுக்கான புதிய விதிகளின் படி மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிறுவனமான எஸ்பிஐ கார்டு நாளை முதல் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய மாற்றங்களின்படி நாளை முதல் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் நிதிக் கட்டணங்கள் மாதத்திற்கு 3.75% சதவீதம் அதிகரிக்கும். அதே போன்று ஒரு பில்லிங் காலத்தில் செல்போன் பில், கரெண்ட் பில் போன்ற யூட்டிலிட்டி பேமெண்ட்களின் மொத்தத் தொகை ரூ.50,000க்கு மேல் இருந்தால் செலுத்தப்படுகிற இந்த தொகைக்கு 1% கட்டணமாக விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

அதே போன்று ஐசிஐசிஐ வங்கியும் அதன் கட்டண அமைப்பு மற்றும் கிரெடிட் கார்டு வெகுமதி திட்டத்தில் மாற்றங்களை செய்துள்ளது. இது காப்பீடு, மளிகை பொருட்கள் வாங்குதல், விமான நிலைய லவுஞ்ச் அணுகல், எரிபொருள் கூடுதல் கட்டணம் தள்ளுபடி மற்றும் தாமதமாக செலுத்தும் கட்டணங்கள் போன்ற சேவைகளில் கை வைக்கிறது. 

இந்தியன் வங்கியின் சிறப்பு வைப்புத்தொகை திட்டத்தில் நீங்கள் நவம்பர் 30ம் தேதிக்குள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். இது தான் சிறப்பு வைப்புத் தொகைக்கான கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்: 

ரயில் டிக்கெட் முன்பதிவில் மோசடியை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இனி நீங்கள் நாளை முதல் பயண தேதிக்கு 90 நாட்களுக்கு முன்பாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கு முன்பாக முன்பதிவு செய்திருப்பவர்களின் பயண டிக்கெட்டுகளில் எந்த மாற்றங்களும் ஏற்படாது. நாளை முதல் பயண தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். 

அதே போன்று நாளை நவம்பர் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டர் விலைகளில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிகரித்திருந்த நிலையில், நாளை வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறையும் என்று மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். 
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!