உஷார்... மார்ச் 16 முதல் 25 நாட்களுக்கு நெல்லை - திருச்செந்தூர் ரயில் முழுமையாக ரத்து!

திருநெல்வேலி - திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் 25 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் நெல்லை - திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் மற்றும் திருச்செந்தூர் - நெல்லை இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2வது யார்டு பிட்லைன் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 08.20 மணிக்கு புறப்பட வேண்டிய மேட்டுப்பாளையம் - போத்தனூர் மெமு ரயிலும் போத்தனூரில் இருந்து காலை 09.40 மணிக்கு புறப்பட வேண்டிய போத்தனூர் - மேட்டுப்பாளையம் மெமு ரயிலும் மார்ச் 16ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!