undefined

உஷார்.. பிரபல உணவகத்தில் அழுகிய இறைச்சி... வாடிக்கையாளார்களுக்கு உடல்நலக் குறைவு... புகாரைக் கண்டுக்கொள்ளாத உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்!

 
தமிழகம் முழுவதுமே சமீப காலங்களாக உணவகங்களில் குறிப்பாக அசைவ உணவகங்களில் காலாவதியான உணவுப் பொருட்களைக் கொண்டு சமையல் செய்து வாடிக்கையாளர்களின் உயிரைப் பதம் பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அப்படி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் - பொள்ளாச்சி சாலையில் செயல்பட்டு வரும் பிரபல அசைவ உணவகமான மேரியோ ஜூஸி கடையில் தாராபுரம் மேற்கு பஜனைமட தெருவில் வசித்து வரும் ஆசாத் அலி என்பவர் தனது குடும்பத்துடன் சென்று சிக்கன் நூடுல்ஸ் மற்றும் பிரட் ஆம்லெட்  வாங்கி சாப்பிட்டுள்ளார்.

இவை அனைத்தையும் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே  குழந்தைகள் உட்பட 4 பேருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது. இது குறித்து  கடை ஊழியர்களிடம் கேட்ட போது  முறையான பதில் அளிக்கவில்லை.

உடனே சமையல் கூடத்திற்கு சென்று குளிர்சாதனப் பெட்டியில் பார்த்த போது துர்நாற்றம் மற்றும் அழுகிப்போன சிக்கன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டனர்.

அங்கு யாருமே  நீண்ட நேரமாக தொலைபேசியை எடுக்காததால், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியான விஜயலலிதா அம்பிகையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தான் சென்னையில் இருப்பதாக கூறி போனைக் கட் செய்துள்ளார். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேலாகியும் அதிகாரிகள் யாருமே வராததால்  ஆசாத் அங்கிருந்து  கிளம்பிச் சென்று விட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!