undefined

உஷார்... இன்று தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் மின் தடை அறிவிப்பு!

 

இன்று மாலை 4 மணி வரை தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் எல்லாம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செப்டம்பர் 30ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  

கோவை தெற்கு பகுதியில், பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படும். 


பெரம்பலூரில் புதுக்குறிச்சி மற்றும் ஓலையூர் துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படும்.  

சென்னை தெற்கு II: பம்மல் பிரதான சாலை, கிரிகோரி தெரு, மசூரன் தெரு, தெய்வநாயகம் தெரு, பாலாஜிநகர் 1வது மற்றும் 2வது குறுக்குத் தெரு, பசும்பொன் நகர், பாலாஜிநகர் 30 அடி சாலை, பாலாஜிநகர்12வது குறுக்குத் தெரு, திருநகர் பகுதிகளில் காலை 9 மணி முதல்  பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.  

வடசென்னை பகுதிகளில்  ஜிபிடி சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, ஜி.ஆர்.கண்டிகை, புதிய ஜிபிடி பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், எஸ்.பி.பேட்டை, ஐயர் கண்டிகை காலை 9 மணி - மாலை 4 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படும். 

தேனி மாவட்டத்தில்  தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல்  மாலை 4 மணி வரை செய்யப்படும். 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!