undefined

உஷார்... ஏமாறாதீங்க... திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவுக்கு விரைவு தரிசன கட்டணம்?! கோவில் நிர்வாகம் விளக்கம்!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் வீற்றிருக்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவுக்கு ரூ. 1000 விரைவு தரிசன கட்டணம் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது. அதனால் தெரியாதவர்களிடம் பணம் கொடுத்து பக்தர்கள் யாரும் ஏமாறாதீங்க.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெறவுள்ள நவம்பர் 2ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரையிலான 8 தினங்களுக்கு மட்டும் கந்த சஷ்டி திருவிழா விரைவு தரிசன கட்டண சீட்டாக நபர் ஒன்றுக்கு ரூ.1000 என நிர்ணயம் செய்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும், ரூ.1000 நிர்ணயம் செய்வது தொடர்பாக பொதுமக்களிடமிருந்தும் பக்தர்களிடமிருந்தும் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் வரவேற்கப்படுகிறது எனவும் திருக்கோயில் தக்கார் மற்றும் இணை ஆணையர் பெயரில் சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவியது. 

இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அவ்வாறான தகவல் ஏதும் திருக்கோயில் சார்பில் தெரிவிக்கப்படவில்லை என கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து திருக்கோயில் தக்கார் ரா. அருள்முருகனிடம் கேட்டதற்கு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வழக்கமாக பக்தர்கள் சிறப்பு தரிசனத்துக்கு அதிகபட்சமாக ரூ. 100 டிக்கெட் தான் நடைமுறையில் உள்ளது. நவ. 2ம் தேதி தொடங்க உள்ள கந்த சஷ்டி விழா கட்டணம் குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் திருக்கோயில் சார்பில் வெளியிடப்படவில்லை என மறுப்பு தெரிவித்தார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!