உஷார்... இந்த 10 மாவட்டங்களில் வேகமெடுக்கும் டெங்கு!
தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், அதற்கு முன்னதாக தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக சுகாதாரத்துறை டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ” கடந்தாண்டு தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டெங்கு பாதிப்பு என்பது பெரிய அளவில் இல்லை. 80 நாடுகளில் டெங்கு பாதிப்பு இருந்தது.இதுவரை தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இல்லை.
2012 ல் 66 டெங்கு உயிரிழப்புகளும், 2017 ல் 65 டெங்கு உயிரிழப்புகளும் பதிவாகி இருந்தது. இந்தாண்டு ஜனவரி 1 முதல் தற்போது வரையில் 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு வந்ததும் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொண்டால் உயிரிழப்புக்கள் ஏற்படுவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் கர்ப்பிணிகள் குழந்தைகள் தான் டெங்குவால் அதிகம் பாதிப்படுகின்றனர். தினமும் 400 – 500 என்ற அளவில் டெங்கு பாதிப்பு தமிழ்நாட்டில் உள்ளது.
டெங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருந்துகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே நோயாளிகளுக்கு கொடுக்கப்டுகின்றன. குறிப்பாக இதுவரை பதிவான 11,743 பேருக்கான டெங்கு பாதிப்பில் 57.6 சதவீதம் சென்னை , கோவை , மதுரை , திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, திருப்பூர் உட்பட 10 மாவட்டங்களில் இருந்து மட்டும் பதிவாகியுள்ளது.
அந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு குறித்த ஆய்வுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு முறைகளையும் மேற்கொண்டு வருகிறது” என தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!