undefined

உஷார்... பத்திரம் மக்களே... காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி நகர்கிறது!

 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவுகிறது. 

தமிழகத்தை நோக்கி காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர துவங்கியுள்ள நிலையில் வடதமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வட தமிழ்நாடு, அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று துவங்கி வரும் நவம்பர் 17ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் நேற்றிரவு துவங்கி விடாமல் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கத் துவங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அலுவலகம் கிளம்பிச் செல்பவர்கள் பெரும் இன்னலுக்குள்ளானார்கள். 

வேளச்சேரி பகுதிகளில் மழைநீர் தற்போதே தேங்கத் துவங்கியிருப்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி தங்களது வாகனங்களை நிறுத்த துவங்கியுள்ளனர். வேளச்சேரி ராம் நகர் பகுதியில், அரசை நம்பி இனியும் பலனில்லை என்கிற நினைப்பில் குடியிருப்பு வாசிகள் மூன்று ரப்பர் படகுகளையும், லைஃப் ஜாக்கெட்டுகளையும் வாங்கி வைத்துள்ளனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!