அகில் அக்கினேனிக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ந்த நாகார்ஜுனா!
நடிகர் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனிக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி தனது காதலி ஜைனப் ராவ்ட்ஜியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக அவரது தந்தை நடிகர் நாகார்ஜுனா இன்று மாலை சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார்.
அகில் அக்கினேனி 2015 ஆம் ஆண்டு "அகில்: தி பவர் ஆஃப் ஜூவா" படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். மேலும் “ஹலோ”, “மிஸ்டர் மஜ்னு” போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், அவரது படங்கள் தமிழகத்தில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில், இந்த நிச்சயதார்த்தம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வரும் நாட்களில், திருமணம் குறித்த அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!