மீண்டும் கார் ரேஸில் பங்கேற்கும் ‘அஜித்'.. துபாய் ரேஸில் பங்கேற்கிறார்!
துபாயில் நடைபெற உள்ள கார் ரேஸில் மீண்டும் பங்கேற்க இருக்கிறார் நடிகர் அஜித். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் நடித்து முடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் பொங்கலன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைப் போலவே குட்பேட் அக்லி படமும் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘தல’ அஜித் பைக் ரைடிங்கில் ஆர்வம் அதிகம் உள்ளவர் என்பதோடு கார் ரேஸில் ஈடுபடுவதும் அஜித்துக்கு பிடித்தமான விஷயம் என்பதால் ஷூட்டிங் இல்லாத சமயங்களில் பைக்கை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் ஜாலியாக மோட்டார் ட்ரிப் செல்வதை வழக்கத்தில் வைத்திருக்கிறார். அவ்வப்போது மலைகளிலும், கரடு முரடான பாதைகளிலும் அஜித் கார் ஓட்டிச் செல்லும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும்.
இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அணிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விளம்பரதாரர்களும் இதை ஒருங்கிணைக்க ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித்குமார் ஐரோப்பிய ஜிடி1 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!