undefined

 திருவையாறில் ஐப்பசி தீர்த்தவாரி புனித நீராடல்... குவிந்த பக்தர்கள்!

 
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஆற்றில் பக்தர்கள் ஐப்பசி தீர்த்தவாரி புனித நீராட குவிந்தனர். ஐப்பசி மாதம் துலாம் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் ஆறுகளில் நீராடுவது புனிதமாக கருதப்படுகிறது. அதன்படி ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான நேற்று, திருவையாறு புஷ்ய மண்டப படித்துறையில், காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி அருகில் உள்ள ஐயாறப்பரை வழிபட்டனர்.

அதன் பின்னர், தர்மசம்வர்த்தினி அம்மனுடன் ஐயாறப்பர் சிறப்பு அலங்காரத்தில் புஷ்ப மண்டப படித்துறையில் எழுந்தருளினர். இதைத் தொடர்ந்து அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!