undefined

 பேருந்து கார் மீது மோதியதில் அதிமுக பிரமுகர் படுகாயம்!

 

 தமிழகம் முழுவதும் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன .அந்த வகையில் தர்மபுரியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில்  கலந்து கொள்வதற்காக விநாயக சரவணன் வந்திருந்தார். கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ரத்தினம் பிள்ளை தெருவில் வசித்து வருபவர்  ராமன் . 67 வயதான  அ.தி.மு.க.வின் முன்னாள் அவை தலைவரான விநாயகர் சரவணன் மற்றும் அ.தி.மு.க. கட்சியினர் சிலரும்  காரில் வந்தனர். பின்னர் கட்சிக் கூட்டம் முடிந்து விடு திரும்பினர்


அப்போது மணியம்பாடி அருகே சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு இறங்கி பேசிக் கொண்டிருந்தனர்.  அவ் வழியாக வந்த தனியார் பேருந்து  காரின் மீது மோதியதில் ஹாரன் அருகில் நின்றிருந்த ராமன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்