undefined

செம தில்லு... அடுத்தடுத்து 13 வாகனங்களை அசால்டாக திருடிய முதியவர்!

 

ஆளைப் பார்த்தால், இவரா இப்படி? என்று சொல்வார்கள். அப்படி ஒன்று, இரண்டு கிடையாது... கிட்டத்தட்ட 13 வாகனங்களைத் திருடி போலீசாருக்கு போக்கு காட்டியிருக்கிறார் முதியவர் ஒருவர். சென்னை மடிப்பாக்கம் உள்ளகரம் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் கவிதா. இவர் கடந்த 10ம் தேதி சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பறக்கும் ரயிலில் அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து மீண்டும் வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்து இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தார். அப்போது அவரது வாகனம் காணாமல் போனது தெரிய வந்தது.

இது குறித்து கவிதா வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, இருசக்கர வாகனத்தை திருடியவர் சென்னை வேளச்சேரி விஜயநகரைச் சேர்ந்த இளங்கோ (63) என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவரிடம் இருந்து 13 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்