undefined

தஞ்சாவூரைத் தொடர்ந்து மதுரையில் அதிர்ச்சி... காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய வாலிபர்.. சிசிடிவி வீடியோ!

 

தஞ்சாவூரில் காதலித்து திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை ஒருவரை பள்ளிக்குள் புகுத்து குத்திக் கொலைச் செய்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சியாக மதுரை  மாவட்டம் ஒருவரை ஒத்தக்கடை அருகே, தன்னைக் காதலிக்க மறுத்து வந்த இளம்பெண் ஒருவர் வாலிபர், அந்த பெண் வேலைப் பார்க்கும் கடைக்குள் புகுத்து கொடூரமாக கொலைவெறியுடன் தாக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தன் காதலுக்கு இளம்பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததால் கடும் ஆத்திரத்தில் இருந்த வாலிபர் ஜெராக்ஸ் கடைக்குள் புகுந்து இளம்பெண் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் இளம்பெண்ணிற்கு தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர் உடனே அங்கிருந்து வெளியேறினார்.

காயமடைந்த பெண் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இளம்பெண்ணை தாக்கிய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!