undefined

இயல்பு நிலைக்குத் திரும்பும் மணிப்பூர்... 13 நாட்களுக்குப் பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு!

 
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை நிகழ்ந்த இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் ஜிரிபாம் மாவட்டத்தில் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், இன்று நவம்பர் 29ம் தேதி வெள்ளிக்கிழமை 13 நாட்களுக்குப் பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.  


ஜிரிபாம் மாவட்டத்தில்  நவம்பர் 11ம் தேதி பாதுகாப்புப் படையினருக்கும் குகி தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனா். அதன்பிறகு  நவம்பர் 16ம் தேதி  நிவாரண முகாம்களில் தங்கியிருந்து காணாமல்போன 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன.

அவா்களை குகி தீவிரவாதிகள் கடத்தியதாக மைதேயி சமூகத்தினா் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், உடல்கள் மீட்கப்பட்டன. அதன் பிறகு அங்கு மீண்டும் வன்முறை வெடித்து.  பல எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மணிப்பூா் மாநில அரசு தெரிவித்துள்ளது. 

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!