ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை.. யுஜிசி அதிரடி உத்தரவு!

 

 

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும்  அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் இனி ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை நடத்தும் என யுஜிசி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். இது குறித்து  யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பள்ளிகளின் தேர்வு முடிவு அறிவிப்பதில் தாமதம், உயர்கல்வியில் சேர்வதில் மாணவர்களின் தடுமாற்றம் மற்றும் மாணவர்களின் உடல் நலன் பாதிப்பு என பலவகையான  தனிப்பட்ட பிரச்சனைகளால் தவிப்பவர்களை கருத்தில் கொண்டு இந்த நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது எனத்  தெரிவித்துள்ளார்.
அதன்படி 2024-25 ம் கல்வியாண்டு முதல் ஜூலை -ஆகஸ்ட், ஜனவரி -பிப்ரவரி என இரு சேர்க்கை சுழற்சிகள் நடைமுறைப்படுத்த உள்ளன.  உலகம் முழுவதும்  முன்னணி கல்வி நிறுவனங்கள் இந்த வகையில்  ஆண்டுக்கு இருமுறை சேர்க்கை நடைமுறையை ஏற்கனவே பின்பற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!