undefined

பெற்றோர்களே உஷார்... செரிலாக்கில் இந்தியாவில் மட்டும் கூடுதல் சர்க்கரை... அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை!

 

 இந்தியாவில் குழந்தை உணவு தயாரிக்கும் நிறுவனங்களில் முண்ணனியில் இருந்து வருவது நெஸ்லே செரிலாக். இந்த உணவுகளில்   கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது. இந்த புகாரை உடனடியாக பரிசீலிப்பதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சுவிட்சர்லாந்தின்  'பப்ளிக் ஐ' மற்றும் சர்வதேச குழந்தைகள் உணவு நடவடிக்கை நெட்வொர்க் `IBFAN' சமீபத்தில் அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

 அதன்படி ஏழை நாடுகளில் விற்பனை செய்யப்படும்  நெஸ்லேயின் செரலாக் மற்றும் பால் பவுடரில்  கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுகிறது.  அதிலும் சில சமயங்களில் சர்க்கரையின் அளவு மிகமிக அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் குழந்தை உணவுப் பொருட்களில்  நெஸ்லே 2.7 கி வரை சர்க்கரை சேர்ப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதே நெஸ்லே செரிலாக் உணவுப் பொருள் ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யப்படும் போது    12-36 மாத குழந்தைகளுக்கான குழந்தை உணவுப் பொருட்களில் சர்க்கரை சேர்க்கப்படவில்லை என்கிறது.

இந்த அறிக்கை இந்தியாவில் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்  இதுகுறித்து உடனடியாக  ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும்படி  FSSAIக்கு உத்தரவு பிறப்பித்தது.  FSSAI இதுகுறித்த ஆய்வுக்கான மாதிரிகளை சேகரித்து வருவதாக  தெரிவித்துள்ளது. அதன் தலைவர்  “செரலாக் உணவில் கூடுதல் சர்க்கரை  சேர்க்கப்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்விற்காக  மாதிரிகளை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி நிறைவடைய 15 முதல் 20 நாள்கள் ஆகலாம்' என தெரிவித்துள்ளார்.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!