undefined

ரூ.10,00,000யைத் தாண்டி அதிர வைத்தது அதானி குழும ஷேர்கள்... எகிறியது சந்தை மூலதனம்!

 

அமெரிக்காவின்  குறுகிய விற்பனையாளர் ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் நியமித்த குழு க்ளீன் சிக்னல் வழங்கியதை அடுத்து, வர்த்தகத்தின் முதல் நாளான திங்கட்கிழமையன்று அதானி குழுமத்தின் பங்குகள் கடும் உயர்வை சந்தித்தன. அதானி குழுமத்தின் பங்குகள் 15 சதவிகிதம் வரை உயர்ந்தன, குழும சந்தை மூலதனம் ரூபாய் 10 லட்சம் கோடியைத்தாண்டியது. குழுமத்தின் சந்தை பங்கு வெள்ளியன்று ரூபாய் 9.34 லட்சம் கோடியாக இருந்த நிலையில் ஒரே நாளில் இந்த உயரத்தை தொட்டது.

திங்கட்கிழமை வர்த்தகத்தின் முடிவில் அதானி குழுமத்தின் முதன்மையான அதானி எண்டர்பிரைசஸ் 19.55 சதவிகிதம் ஏற்றத்துடன் முன்னிலை வகித்தது. அதனைத்தொடர்ந்து அதானி வில்மர் (10 சதவிகிதமும்), அதானி போர்ட்ஸ் (6.15 சதவிகிதம்) மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் (5.22 சதவிகிதம்) உயர்ந்தன.

அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் என்டிடிவி ஆகியவை 5 சதவிகிதம் உயர்ந்து அப்பர் சர்க்யூட்டை எட்டின. வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில், நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவும் பங்குகளில் உள்ள முறையான அபாயங்கள் எதுவும் இல்லை எனக்கூறியது. சந்தை ஒழுங்குமுறை அமைப்பான SEBI (இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்) தரப்பில் முதன்மையான எந்த ஒழுங்குமுறை தோல்வியும் இல்லை என்றும், அதானி குழுமத்தின் தரப்பில் விலை கையாளுதல் எதுவும் இல்லை என்றும் முதல் அறிக்கையில் கூறியது. இந்த தகவல் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் அளிக்க தேவையான நடவடிக்கைகளை குழுமமும் எடுத்துள்ளது எனத்தெரிவித்தது. இவை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து பங்குகளின் உயர்விற்கு உதவியது.

மார்ச் 2ம் தேதி அமைக்கப்பட்ட குழுவில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில், ஓய்வுபெற்ற பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.தேவதர், பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் ஓ.பி.பட், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் தலைவர் கே.வி.காமத், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நில்கேனி பத்திரங்கள் மற்றும் ஒழுங்குமுறை நிபுணர் சோமசேகர் சுந்தரேசன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!