கதறும் முதலீட்டாளர்கள்... லஞ்ச புகார் எதிரொலி... அதானி நிறுவன பங்குகள் கடும் சரிவு!
அதானி மீதான ரூ.2,100 கோடி லஞ்ச புகாரைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் சர்வதேச பங்குகள் கடுமையான சரிவை சந்தித்து 20 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்தன.
250 மில்லியன் டாலர்கள் லஞ்சம் வழங்கி திட்டத்தில் பங்கு பெற்றதாக கௌதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியதால் அதானி குழுமம் புதுப்பிக்கப்பட்ட ஆய்வை எதிர்கொள்கிறது.
அமெரிக்க பெடரல் வழக்கறிஞர்கள் நிறுவனர் கெளதம் அதானி மீது லஞ்சக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததை அடுத்து அதானி குழுமத்தின் பங்குகள் இன்றைய காலை நேர வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் ஆகியவை தொடக்க வர்த்தகத்தில் 10-20 சதவீதம் வரை சரிந்தன.
அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் லோயர் சர்க்யூட்டில் 10 சதவீதம் குறைந்து ரூ.2,539.35 ஆக இருந்தது. ஹிண்டன்பர்க்கிற்குப் பிந்தைய தாழ்விலிருந்து பங்கு இருமடங்காக அதிகரித்துள்ளது, ஆனால் முந்தைய நிலைகளை இன்னும் மீட்டெடுக்கவில்லை. அதானி கிரீன் எனர்ஜி பங்கு 17 சதவீதம் குறைந்து ரூ.1,172.5 ஆக இருந்தது. அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 20 சதவீதம் சரிந்து லோயர் சர்க்யூட்டில் ரூ.697.25 ஆக இருந்தது.
மின்னணு ஆதாரங்களை நீக்குவதன் மூலம் நீதியைத் தடுக்கும் முயற்சிகள் மற்றும் நீதித்துறை, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC), மற்றும் FBI ஆகியவற்றை தவறாக வழிநடத்தும் முயற்சிகளும் குற்றச்சாட்டுகளில் அடங்கும். கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு கூடுதலாக, எஸ்இசி தனி சிவில் வழக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் அதானி குழுமத்தின் சர்வதேச பத்திரங்களையும் தாக்கியுள்ளன. அதானியின் டாலர் மதிப்புள்ள பத்திரங்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. அதானி குழுமத்தின் பங்குகள் மற்றும் பத்திரங்களின் கூட்டு மதிப்பில் ரூ.12 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்திய 2023 ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கைக்குப் பிறகு, குழுமத்தின் கடன் பத்திரங்களில் மிகக் கடுமையான வீழ்ச்சி மீண்டும் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!