undefined

 நடிகை வித்யா பிரதீப்புக்கு ஆண் குழந்தை!

 
 

சின்னத்திரையில் பிரபல நடிகராக இருந்து வருபவர்   நடிகை வித்யா பிரதீப். 2010  முதல் நடித்துவரும் வித்யா  2018ல் அவரது நடிப்பில்   வெளியான தடம் படம் ரசிகர்களிடையே சிறப்பான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது. சின்னத்திரையிலும் பெரும் வரவேற்பு இருந்து வந்தது.  சன் டிவியின் அழகி சீரியல் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் தனக்கும் மைக்கேல் என்பவருக்கும் திருமணமான விஷயத்தை  ஜூலை மாதத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பதிவிட்டிருந்தார்.  நடிகை வித்யா பிரதீப் சின்னத்திரை மற்றும் சினிமாவில் அடுத்தடுத்து லீட் கேரக்டர்களில் நடித்து வருபவர். இவர் கடந்த 2010ம் ஆண்டிலிருந்து சினிமாவில் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார்.  அழகி சீரியல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  சன் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றாக அமைந்த இந்தத் தொடர்  அதிகமான டிஆர்பியையும் சேனலுக்கு பெற்றுத் தந்தது.

இந்நிலையில் தனக்கும் மைக்கேல் என்பவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக கடந்த ஜூலை மாதத்தில் வித்யா பிரதீப், இன்ஸ்டாவில்  அறிவித்திருந்தார். மேலும் தங்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருமணம் நடந்து முடிந்ததாகவும் குறிப்பிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார்.  கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய கர்ப்பகால போட்டோஷூட்டை  வெளியிட்டதில் அவர்  நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் தற்போது வித்யா பிரதீப் -மைக்கேல் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனக்கு ஆண் குழந்தை பிறந்த விஷயத்தை குழந்தையின் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.

அவருக்கு நடிகை வாணி போஜன் உட்பட பல  முன்னணி பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 13 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் மைக்கேலை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட வித்யா, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இதை சமூக வலைதளப்பக்கம் மூலம் அறிவித்திருந்தார். 
திருமணத்திற்கு பின்பே பயோடெக்னாலஜி படிப்பை முடித்த வித்யா, அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இடையில் அழகி சீரியலிலும் நடித்துள்ளார்.  சைவம், பசங்க 2 என அடுத்தடுத்த படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு சீரியல்தான்  கைக்கொடுத்தது. நடிகை வித்யாவிற்கு  நவம்பர் மாதத்தில் சீமந்தம் நடைபெற்ற  புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!