undefined

குழந்தை பெத்துக்க ஆசை... அம்மாவாக எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன்... நடிகை சமந்தா நெகிழ்ச்சி!

 

நடிகை சமந்தா  நடிப்பில் உருவான சிட்டாடல் - ஹனி பனி வெப்  தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட் இருந்தார். தற்போது  அதிலிருந்து மீண்டுள்ள நடிகை சமந்தா, தற்போது திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

படப்பிடிப்பை தாண்டி பொது நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதில் சமீபமாக ஆர்வம் காட்டி வருகிறார்.  இந்நிலையில் வெப் தொடருக்கான புரமோஷன் நிகழ்வில் பங்கேற்ற சமந்தா, "ஒரு பெண் தாயாக இருப்பது அழகான அனுபவம். பலரும் வயதைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.

ஆனால், குழந்தை பெற்றுக் கொள்ள வயது ஒரு தடையே கிடையாது. இன்னும் எனக்கு தாயாகும் விருப்பம் இருக்கிறது. அதற்காக  எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். நானும் அம்மாவாக வேண்டும் என்கிற கனவு இருக்கிறது" என உருக்கமாக பேசியுள்ளார். சமந்தாவின் இக்கருத்து ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிட்டாடல் தொடரில் ஒரு குழந்தைக்கு தாயாக சமந்தா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!