undefined

அச்சச்சோ... என்னாச்சு... நடிகை ராக்கி சாவந்த் மருத்துவமனையில் அனுமதி! ரசிகர்கள் அதிர்ச்சி!

 

 பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்  இதயக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

கடந்த 2021ல் பிக் பாஸ் 15 சீசனில் தனது கணவர் ரித்தேஷை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார் நடிகை ராக்கி சாவந்த்.  துரதிர்ஷ்டவசமாக அந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்குப் பின் 2022ல் இருவரும் பிரிந்தனர். ரித்தேஷிடமிருந்து பிரிந்த பிறகு நடிகை ராக்கி சாவந்த், ஆதில் கான் துரானி என்பவரை மணந்தார். இந்தத் திருமணமும் பிரச்சினையில் முடிந்தது.  
இது குறித்து பேசியவர், ஆதிலுக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டி பரபரப்பைக் கிளப்பினார். ஆனாலும், ரசிகர்களிடையே நடிகை ராக்கி சாவந்துக்கு பெரும் வரவேற்பு இருந்து வந்தது. திரையுலகில் பிஸியாகவே வலம் வந்து கொண்டிருந்தார்.
நடிகை ராக்கி சாவந்த் குற்றச்சாட்டை மறுத்து வந்த ஆதில், நீதிமன்றத்திலும் நடிகை ராக்கி சாவந்த் மீது வழக்கு தொடர்ந்தார். மேலும், ஆபாச படங்கள் கசிய விட்டது தொடர்பாக சீக்கிரம் ராக்கி கைது செய்யப்படுவார் என்றும் ஆதில் கூறி வந்தார். 


இந்நிலையில், ராக்கி நேற்று இதயக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது முன்னாள் கணவர் ரித்தீஷ், ‘சீக்கிரம் நடிகை ராக்கி சாவந்த் உடல்நலன் குறித்து தெரிவிப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!