நடிகை ராதாவின் மகளுக்கு திருமணம்... வைரலாகும் இன்ஸ்டா...!!

 

80களில் தமிழ் சினிமாவில்  ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ராதா. இவர் முன்னணி நடிகர்களான  சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யாராஜ், பிரபு, மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ்  ஆகியோருடன் ஜோடியாக நடித்தவர். இவருக்கு 2 மகள்கள். மூத்தமகள்   கார்த்திகா நாயர். இவர்  கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘கோ’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனை அடுத்து அவர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘அன்னக்கொடி’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’புறம்போக்கு என்ற பொதுவுடமை’ ஆகிய படங்களில் நடித்தார். ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.


இந்நிலையில்  அக்டோபரில்  கார்த்திகாவுக்கு எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அதிகாரபூர்வமாக நடிகை கார்த்திகாவே அறிவித்திருந்தார். இதையடுத்து, இன்று நவம்பர் 16ம் தேதி வியாழக்கிழமை  திருவனந்தபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமண நிச்சயம் ஆனதில் இருந்து மாப்பிள்ளையின் புகைப்படத்தை வெளியிடவில்லை.   கார்த்திகா தற்போது மாப்பிள்ளை ரோஹித் மேனனுடன் எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.


 
அதில், “உன்னை சந்தித்தது கனவு போன்று இருக்கிறது. அதன்பிறகு உன்னுடன் நான் காதலில் விழுந்தது மேஜிக் போல நடந்தது. இனிமேல் நாம் இருவரும் எப்போதும் சேர்ந்து வாழ்வதற்கான தொடக்கத்தின் கவுண்டவுன் இப்போதிருந்து தொடங்குகிறது” எனக் காதலில் உருகியுள்ளார். திரையுலகைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் இந்த காதல் ஜோடிக்குத் தங்களது திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!