undefined

 நடிகை பிரணிதா கர்ப்பமானதை ‘பேபி பம்ப்’ படத்தை வெளியிட்டு அறிவித்தார் !

 
 நடிகை பிரணிதா சுபாஷ் தான் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருக்கும் செய்தியை ட்விட்டரில் தனது பேப் பம்ப் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களுக்கு பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை பிரணிதா சுபாஷ், பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், திருமணமாகி செட்டிலானார். இந்நிலையில், தனது கர்ப்பத்தை ‘பேபி பம்ப்’ தெரிவதைப் போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, தனது பேண்ட் பிட்டாகவில்லை என்று பகிர்ந்து ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் நடிகை பிரணிதா. 

இன்னொருவர் "உன் அழகு மறைந்துவிடும்" என்று கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும், பல ரசிகர்கள் இந்த செய்தியை வரவேற்று, வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 2010ல் தர்ஷனின் 'பொர்க்கி' படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய ப்ரணிதா, சமீபத்தில் மலையாளப் படம் 'தங்கமணி' மற்றும் கன்னட படம் 'ரமணா அவதாரா' போன்ற படங்களில் நடித்திருந்தார். கடந்த 14 வருடங்களில் 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 2021ஆம் ஆண்டு பெங்களூருவில் தொழிலதிபர் நிதின் ராஜுவை மணந்த பிரணிதா சுபாஷ், 2022ம் ஆண்டு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தது

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா