undefined

 சினிமாவில் பாலியல் தொல்லை... நடிகை நிவேதா தாமஸ் ஓபன் டாக்!

 
 

மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் புயலைக் கிளப்பி இருக்கும் நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கை வருத்தமளிப்பதாக நடிகை நிவேதா தாமஸ் கருத்து தெரிவித்துள்ளார்.மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மொழி திரையுலகிலும் ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. பல முன்னணி நடிகை பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்டிருப்பதாக கடந்த வாரங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். நடிகைகளின் கேராவன்களில் கேமிரா வைத்து ஹீரோக்கள் படப்பிடிப்பில் பார்த்து ரசித்ததாக நடிகை ராதிகா பரபரப்பைக் கிளப்பினார்.  

தெலுங்கு திரையுலகிலும் பெண்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் பற்றிய அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என நடிகைகள் சமந்தா, அனுஷ்கா உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி நடிகை நிவேதா தாமஸ் சமீபத்திய விழா ஒன்றில் மனம் திறந்துள்ளார். இவர் ‘ஜில்லா’, ‘தர்பார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்திருக்கிறார். அவர் பேசியிருப்பதாவது, “ஹேமா கமிட்டி அறிக்கை உண்மையிலேயே வருத்தம் அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. பெண்கள் வீட்டில் இருப்பதைக் காட்டிலும் வேலை செய்யும் இடத்தில்தான் அதிக நேரம் இருக்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு வேலையிடத்தில் மிக அவசியம். ஹேமா கமிட்டி போல, பிற துறைகளிலும் பெண்களுடைய பாதுகாப்பிற்கு கமிட்டி அமைத்தால் நல்லது” எனக் கூறியிருக்கிறார்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை