undefined

சிறையிலிருந்து நடிகை கஸ்தூரி ஜாமீனில் விடுவிப்பு!

 
புழல் சிறையில் இருந்து நடிகை கஸ்தூரி ஜாமீனில் வெளியில் வந்தார். சென்னையில் பிராமண சமூகத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில், தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியதாக சர்ச்சை உருவானது. இதனையடுத்து மதுரையில்  நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பினர்.  தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த கஸ்தூரி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் வீட்டில் தங்கியிருந்தார்.

அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மகளிர் சிறையில் அடைத்தனர். அவரை நவம்பர் 29ம் தேதி வரை  நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.  நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில்  தனக்கு ஆட்டிசம் பாதித்த குழந்தை இருப்பதாகவும், அதனை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

கஸ்தூரியை ஜாமீனில் விடுவிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சென்னை புழல் சிறையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.  சிறைக்கு வெளியே  கஸ்தூரி  "என்னை நேசிக்கும் தமிழக அரசுக்கு நன்றி. அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்கு ஆதரவு தெரிவித்த தலைவர்கள், நண்பர்களுக்கு நன்றி. எனக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நன்றி. தெலுங்கானா, ஆந்திரா மக்களுக்கும் மிகப்பெரிய நன்றி."  எனப் பேசியுள்ளார்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!