ப்ளீஸ்... மன்னிச்சிடுங்க... தெலுங்கர் சர்ச்சை கருத்துக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்பு!
சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு எதிரான அவதூறுகளை கண்டித்து அர்ஜுன் சம்பத் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய நடிகை கஸ்தூரி, “பிராமணர்கள் தெய்வத்துக்கு சேவை செய்கிறார்கள். எப்படி ஆரிய பண்பாடு தமிழ்நாட்டுக்கு வரும்போது, சத்ரியர்கள், வன்னியர்கள், செட்டியார்கள் என இணைந்து கொண்டார்களோ அதேபோல் கோவில் பணிகளை செய்ய, ஐயங்கார்கள், ஐயர்கள், சைவ பிள்ளையார்கள் ஆகியோர் இணைந்து கொண்டனர்.
300 ஆண்டுகளுக்கு முன் மன்னர் காலத்தில் அந்தபுரத்து பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள். அவர்கள் இன்று தங்களை தமிழர்கள் எனச் சொல்லி கொள்கின்றனர்.” கஸ்தூரியின் சர்ச்சை பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், தெலுங்கு மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கம் எனக்கு சிறிதும் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் தெலுங்கு மக்களின் உணர்வு புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது கருத்துகள் குறிப்பிட்ட சிலரை சார்ந்து மட்டுமே தெரிவித்தவை, நான் எப்போதும் உண்மையான தேசியவாதி, ஆந்திர மக்களை நான் மிகவும் மதிக்கிறேன். நவம்பர் 3 ம் தேதி உரையில் தெலுங்கு மக்கள் குறித்த கருத்துகளை திரும்பப்பெறுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!