undefined

தெலுங்கர்கள்  அந்தப்புர பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் .. . மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை கஸ்தூரி!

 


 
 
சென்னையில் பிராமணர்களுக்கு எதிராக நடைபெறும் அவதூறுகளை கண்டித்து அர்ஜுன் சம்பத் தலைமையில் இந்து மக்கள் கட்சி சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக்  கூட்டத்தில்  நடிகை கஸ்தூரி, “பிராமணர்கள் தெய்வத்துக்கு சேவை செய்கிறார்கள். எப்படி ஆரிய பண்பாடு தமிழ்நாட்டுக்கு வரும்போது, சத்ரியர்கள், வன்னியர்கள், செட்டியார்கள் என இணைந்து கொண்டார்களோ அதேபோல் கோவில் பணிகளை செய்ய, ஐயங்கார்கள், ஐயர்கள், சைவ பிள்ளைமார்கள்   இணைந்து கொண்டனர்.

 300 ஆண்டுகளுக்கு முன் மன்னர் காலத்தில் அந்தபுரத்து பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தெலுங்கர்கள். அவர்கள் இன்று தமிழர்கள் என தாங்களே சொல்லி கொள்கின்றனர்”  எனப் பேசியிருந்தார். நடிகை கஸ்தூரியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்  இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் “பொய்களுக்கு நான் பயப்படவே மாட்டேன்.. தெலுங்கு மக்களை நான் அப்படி சொல்லவே இல்லை..

எனது பேச்சை திரித்து திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்... என் புகுந்த வீடு தெலுங்கு. என் மகள்களுக்கு தமிழும், தெலுங்கும் இரு கண்கள். எத்தனையோ பொய்களை பார்த்து விட்டேன். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். இனவாதத்தை நான் பேசவில்லை. தெலுங்கு இனம் என்றோ தெலுங்கு மக்கள் என்றோ நான் சொல்லவில்லை. வந்தேறி என பிராமணர்களை சொல்பவர்கள் தமிழர்களா? என்று தான் கேட்கிறேன்” எனக் கூறியுள்ளார்.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!