undefined

 டான்ஸ் ஸ்கூல் ஆரம்பித்தார் நடிகை இனியா!

 
 

தமிழ் திரையுலகில் ‘வாகை சூடவா’ படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே புகழ் பெற்றவர் மலையாள நடிகை இனியா. அதனைத் தொடர்ந்து மவுனகுரு, அம்மாவின் கைபேசி, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

நடன கலைஞரான இவர் துபாயில், 'ஆத்ரேயா ஆர்ட்ஸ் ஸ்டூடியோ' என்ற பெயரில் நடனப் பள்ளி ஒன்றைத் தொடங்கி உள்ளார்.இதுபற்றி பேசிய நடிகை இனியா, “ நடனத்துறையில் பாரம்பரியம் மற்றும் நவீன கலையை கலந்து புதுவிதமாகக் கற்பிப்பதில் எங்கள் ஸ்டூடியோ சிறந்து விளங்குகிறது.

சமகால நடனம், செமி கிளாசிக்கல், திரைப்பட நடனம், கதக், ஒடிசி, லத்தீன் நடனம், ஹிப்ஹாப் உட்பட பல கலை வடிவங்களை நேர்த்தியாக கற்றுக் கொடுப்பதோடு, மேடை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்கள் என பலவித நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் முழுவீச்சில் செயல்படுகிறோம்” என்றார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை