“சாகிற வயதில் உள்ள நடிகர்கள்...” துரைமுருகன் பேச்சுக்கு முதல்வர் அப்செட்! ரஜினி குடும்பத்தார் அதிர்ச்சி!
பழைய மாணவர்கள் என்று ரஜினி பேசிய பேச்சு மேடை சுவாரஸ்யத்திற்காக, கலைஞரின் திறமையைப் போற்றுவதற்காக பேசிய பேச்சு என்பதைப் புரிந்து கொள்ளாமல் துரைமுருகன் ரியாக்ட் செய்த விதம் திமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
‘விழாவிற்கு கூப்பிட்டு வெச்சு அசிங்கப்படுத்துறது இது தான்’ என்று முதல்வர் ஸ்டாலின் துரைமுருகன் பேசிய பேச்சுக்கு தன்னுடைய அதிருப்தியை எ.வ.வேலுவிடம் வெளிப்படுத்தியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. உடனே அவரை ரஜினியிடம் பேச சொல்லுங்க... அவர் அமைச்சரா நீடிக்கணுமா? வேண்டாமா? என்று ஆவேசமாக பேசியிருக்கிறார் முதல்வர்.
ரஜினியின் பேச்சு, பதிலடி கொடுத்த துரைமுருகன், வயதாகி, பல்லுப்போன, சாகிற வயதில் உள்ள நடிகர்கள் எல்லாம் இன்னும் நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லை என்று பேசியிருப்பது தமிழக மக்களையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
கட்சிகளைத் தாண்டி தமிழக மக்களிடையே ரஜினிக்கு இன்னும் செல்வாக்கு இருக்கிறது. ரஜினியின் படங்களை அனைத்து கட்சியினருமே ரசித்து பார்க்கின்றனர். அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தமிழகமே கலங்கி தான் போனது. இந்நிலையில், கருத்தை கருத்தோடு மோதாமல் இன்னும் ரஜினியும் பழைய மாணவராகவே நீடித்து வருகிறார் என்று சொல்லியிருந்தாலும் கூட பரவாயில்லை... அவரது உடல்நிலை குறித்து ஏளனம் செய்ததை ஏற்க முடியாது. வரும் தேர்தலில் இதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று ரஜினி ரசிகர்கள் களத்தில் இறங்குவதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நிம்மதியாக அமெரிக்கா புறப்பட இருக்கும் நேரத்தில் என்னை வருத்தத்தோடு தான் அனுப்பி வைக்கிறீர்கள்? மத்திய அமைச்சர் கலைஞர் நாணயம் வெளியிட்டு பேசியது எப்படி சந்தோஷம் தந்ததோ அதைப் போலவே கலைஞரின் பெருமையையும், திறமையையும் திறம்பட பேசியிருந்தார் ரஜினி. கட்சிக்கு அப்பாற்பட்டு கலைஞர் மீது அவருக்கு அன்பு உண்டு. எனக்கும் அவர் மீது மரியாதை உண்டு. இப்படி கூப்பிட்டு வெச்ச்சு, அவரை அசிங்கப்படுத்துவது போல துரை முருகன் பேசிட்டாரே என்று முதல்வர் கடும் அப்செட்டில் இருக்கிறார் என்கிறார்கள் நெருக்கமானவர்கள்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!