undefined

 தமிழக முதல்வராக நடிகர் விஜய்... சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற தவெக தொண்டர்கள்!

 
 

2026ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் விஜய் முதல்வராக வேண்டி சென்னையில் இருந்து வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் பாதயாத்திரையாக சென்றடைந்தனர்.நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக நிர்ணயித்து அவர் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த 22-ம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து தற்போது மாநாட்டுக்கான பணிகளை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த அனுமதி கேட்டு புஸ்ஸி ஆனந்த், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேற்று அனுமதி கேட்டு மனு அளித்துள்ளார். செப்டம்பர் மாதம் 23ம் தேதி மாநாடு நடைபெற‌ இருக்கிறது. கட்சியின் முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் உள்பட பல்வேறு விஷயங்களை நடிகர் விஜய் தொண்டர்கள் மத்தியில் பேசவிருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக வர வேண்டி சென்னையில் இருந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பாதையாத்திரையாக  வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு சென்றடைந்தனர். சுமார் 350 கி.மீ. தூரம் கையில் கட்சிக்கொடியை ஏந்தியபடி, பாதயாத்திரை சென்ற நிர்வாகிகள் நேற்றிரவு வேளாங்கண்ணி சென்றடைந்தனர். இந்நிலையில், இன்று வேளாங்கண்ணியில் நடைபெறும் விழாவில் கலந்துக் கொண்டு நடிகர் விஜய் முதல்வராக வர வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்ய இருக்கின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை