நடிகர் சல்மான் கான் தாக்குதல் திட்டம்.. பிஷ்னோய் சகோதரர் குறித்து தகவல் சொன்னால் ரூ.10 லட்சம் சன்மானம்!
மகாராஷ்டிராவில் முக்கிய காங்கிரஸ் தலைவரான பாபா சித்திக் அக்டோபர் 12ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் ரவுடி கும்பல்தான் காரணம் என்று போலீஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது சபர்மதி சிறையில் உள்ளார். சிறையில் இருந்தபடியே இதுபோன்ற குற்றங்களை அரங்கேற்றி வருகிறார்.
அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதற்காக என்ஐஏவால் தேடப்பட்டு வருகிறார். அன்மோல் பிஷானோய் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது. 2022ல் NIA அவருக்கு எதிராக 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது. இப்போது, பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அன்மோல் தேடப்பட்டு வருகிறார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!