undefined

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்... திரையுலகினர் அஞ்சலி!

 

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80.

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு 11 மணியளவில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவிற்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

 

நடிகராக திரையுலகில் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ் தனிமுத்திரை பதித்துள்ளார்.  டெல்லி கணேஷ் சிறந்த மேடை நாடக நடிகர். திறமையான டப்பிங் கலைஞராகவும் விளங்கினார். தூத்துக்குடியில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். 

தமிழில் சிந்து பைரவி, நாயகன், அபூர்வ சகோதரர்கள், சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 உட்பட 400க்கும் மேற்பட்ட படங்களில்  நகைச்சுவை, குணச்சித்திரம் என பல கதாபாத்திரங்களில் திறம்பட நடித்துள்ளார்.

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம் அறிமுகமான டெல்லி கணேஷ், இந்திய விமானப்படையில் பணியாற்றியவர். நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக விமான பணியை துறந்து விட்டு திரையுலகில் நுழைந்தவர். 

1976ல் அறிமுகமான காலத்தில் இருந்து தற்போது வரை சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1979ம் ஆண்டு பசி படத்திற்காக "தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும், 1993 - 1994ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அரசின் "கலைமாமணி விருது"ம் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!