undefined

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன்.. பல கண்டிஷன் போட்ட நீதிமன்றம்!

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டனர். இதில் நடிகர் தர்ஷன் பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் சிறையில் மூவருடன் சுற்றித்திரியும் படங்கள் இணையத்தில் வைரலானதை அடுத்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து தர்ஷன் மாற்றப்பட்டார்.

இந்நிலையில் நடிகர் தர்ஷனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக இரு தரப்பு விசாரணைகளின் முடிவில் நடிகர் தர்ஷனுக்கு 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி தனது உத்தரவில், “தர்ஷன் பாஸ்போர்ட்டை ஒப்படைத்து, அவர் விரும்பிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விவரங்களை ஏழு நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.

முன்னதாக, அவரது இடைக்கால ஜாமீனுக்கு அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். “தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் சாட்சிகளை அழிக்க வாய்ப்புள்ளது. எனவே, இடைக்கால ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார்.  தர்ஷன் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். சாட்சிகளை அழிக்க முயற்சிக்க மாட்டார். எனவே அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்” என்று  கூறினார். 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!